Saturday, August 17, 2013

தகுதியின்றி தவிக்கிறேன் !!



கதிரவன் கருகினான் உன் கண்களை கண்டு !

முழுமதி முகவரி இழந்தான் உன் முகம் கண்டு !

பூக்களும் பூக்க மறந்தன உன் புன்னகை கண்டு !

வாயு மூர்ச்சையிழந்தான் உன் வாசம் கொண்டு !

இந்திரன் இமைகள் இழந்தான் உன் இடை கண்டு !

நதிகள் நடை கெட்டன உன் நளினம் கண்டு !

நாடே உன் விடைக்கு காத்திருக்க,
போட்டியிட தகுதியின்றி தவிக்கிறேன் !!

No comments:

Post a Comment