Saturday, August 17, 2013

மீண்டும் ஓர் புராணம்



லங்கை அழிக்க பிறந்த சீதை,
லோகம் அழிய பிறந்த கீதை !


கண்கள் கிழியும் என்னவள் பார்வை
யுகம் கொல்ல வந்தவளோ இச்செந்தமிழ் பாவை !


பெண்ணாகி அவள் வர,
பொன்னும் துரும்பானதடி !


பிறக்குமோ மீண்டும் ஓர் புராணம் ?
காவியம் படைக்க கம்பனும் இல்லை,
பாடி பருகிட பாரதியும் இல்லையே !

வின்னைதொடும் விதி இல்லையே !!



பார்த்த முதல் தருணம்,
வார்த்தை கண்டது மரணம் !

பழகிட துடித்தது இதயம்,
ஏனோ தடுத்தது மதியும் !

நெருங்கிட தவித்தேன்,
பிரியும் துணிவின்றி !

உறவு அறியா உணர்வாகினாய்,
உணர்வு அறியா உயிராகினாய் !

வான்போல் வாழ்கிறாய்,
வின்னைதொடும் விதி இல்லையே !!

தகுதியின்றி தவிக்கிறேன் !!



கதிரவன் கருகினான் உன் கண்களை கண்டு !

முழுமதி முகவரி இழந்தான் உன் முகம் கண்டு !

பூக்களும் பூக்க மறந்தன உன் புன்னகை கண்டு !

வாயு மூர்ச்சையிழந்தான் உன் வாசம் கொண்டு !

இந்திரன் இமைகள் இழந்தான் உன் இடை கண்டு !

நதிகள் நடை கெட்டன உன் நளினம் கண்டு !

நாடே உன் விடைக்கு காத்திருக்க,
போட்டியிட தகுதியின்றி தவிக்கிறேன் !!

நினைவு


கொஞ்சும் தமிழும்
கொஞ்சிட தவிக்கும்
கன்னங்கள், 

கண்மூடி உறங்கும் இருளில்,
கண்கள் தந்திடும் விடியல் !

நிசப்தம் நீக்கிடும் விசை,
நினைவில் பூக்கும் சிரிப்பின் மெல்லிசை !

தனிமை துரத்திடும்,
தேவதை நறுமணம் !

நிஜம் இல்லை எனினும், உன்
நினைவுகள் போதுமடி
நிலைத்திடும் நாடி !

ஹாசினி




கவிதை கொட்டும் கண்கள்,
அதற்கு வர்ணம் தீட்டும் கண்மை !


சாயமின்றி சாய்க்கவல்ல உதடு.
பூக்கும் பூக்கள் தோற்கும் புன்னகை!

போர்களை மூட்டிடும் சங்கன முழங்கும் குரல் !

பிரம்மன் கண்ட கனவின் விடை உன் இடை
உலகம் நாடக மேடையென உணர்த்தும் நடை


கவிதைக்கு பொய் அழகாம்
பின் வரும் மெய்களும் அழகுதான்
, ;-)

பாலுணர்வு பொய்யென்று அதற்கு
பாடைகட்டிய உன் நட்பு !!

கானல் நீரென கண்டேன் உன்னை,
காவிரி வெள்ளமாய் தனித்தாய் என்தாகம் !


என் தனிமையை உடைத்தெறிந்த பெண்மையே
உண்மையில், என் ஹாசினி
என் சுவாசம் நீ
 !!!!